மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. மணிமேகலை சொன்னது நடந்துருமோ.! அதிர்ச்சியில் உறைந்து நின்ற போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. அதில் தற்போது கிரேஸ், வித்யுலேகா, தர்ஷன், அம்மு அபிராமி, ஸ்ருதிகா, ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் கோமாளியாக மணிமேகலை, சிவாங்கி, பாலா, சுனிதா, குரேஷி உள்ளிட்ட சிலர் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பாட்ஷா வேடத்தில் வரும் மணிமேகலை, கிரேஸ் மற்றும் வித்யூலேகாவிடம் 'கண்ணா கடவுள் கெட்டவங்களுக்கு அள்ளிக் கொடுப்பார் ஆனால் கைவிட்டு விடுவார்' என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து வித்யுலேகா மற்றும் கிரேஷ் இருவரும் எலிமினேஷன் நிலைக்கு வந்துள்ளனர்.
மேலும் வித்யுலேகா எலிமினேட் ஆவது போல அவருக்கு கை கொடுக்கின்றனர். உடனே மணிமேகலை ஷாக்காகி நான் எதுவும் செய்யவில்லை என கூறுகிறார். இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார்? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.