திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இசையமைப்பாளர் டி இமானிற்கு துரோகம் செய்த சிவகார்த்திகேயன்.. பேட்டியில் கண்கலங்கி பேசிய டி இமான்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் சின்ன திரையில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு தனது திறமையின் மூலம் முன்னேறி வெள்ளித்திரையில் கதாநாயகன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதன் முதலில் மெரினா, மனம் கொத்தி பறவை போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் திரை பயணத்தில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் டி இமானை சாரும். சிவகார்த்திகேயனின் பல ஹிட் திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார் டி இமான்.
இதுபோன்ற நிலையில், சமீபத்தில் டி இமான் யூடியூப் சேனலில் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் சிவகார்த்திகேயனுடன் ஏன் தற்போது ஒன்றாக சேர்ந்து படங்கள் பண்ணுவதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இமான், "சிவகார்த்திகேயன் பண்ண துரோகத்திற்கு இந்த ஜென்மத்திலும் அவருடன் சேர்ந்து படம் பண்ண மாட்டேன். என் குழந்தைகளுக்காக தான் உண்மையை வெளியே சொல்லாமல் அமைதியாக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். திடீரென்று இமான் இவ்வாறு பேட்டியளித்து இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இமானிற்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.