இனி என் ஆபீஸ்க்கு வந்துருங்க.. விஜயகாந்த் நினைவிடத்தில் ஆசி பெற்று நடிகர் புகழ் அளித்த உறுதி.!



daily-lunch-for-50-peoples-actor-pugazh-announced

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாத பலரும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் புகழ் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐயாவின் இறுதி அஞ்சலியிலும் நான் கலந்து கொண்டேன். விஜயகாந்த் ஐயா ஏராளமான உதவிகளை செய்துள்ளார். பசி என்று வரும் ஏராளமானோருக்கு சாப்பாடு போட்டுள்ளார் என பலர் சொல்லி கேள்விபட்டுள்ளேன். இந்நிலையில் இன்று முதல் நானும் 50 பேருக்கு மதிய உணவு வழங்க உள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் இதை செய்வேன்.

 50 பேருடன் அதனை ஆரம்பிக்கிறேன். அதற்காக ஐயாவிடம் ஆசிர்வாதம் வாங்கவே இங்கு வந்தேன். யாருக்காவது பசி உணவு வேண்டுமென்றால் கேகே நகரில் உள்ள எனது ஆபிஸ்க்கு வந்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.