ரஜினியின் மகள் திருமண வரவேற்பில் ஒதுங்கி ஓரமாக நின்ற தனுஷ்!! காரணம் இதுதான்!!



danush-in-soundarya-function


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சமீபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் கடந்த 9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதனையடுத்து திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.

rajinikanth

இந்நிலையில் சவுந்தர்யா-விசாகன் திருமணம் நேற்று காலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கோலாகாலமாக நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

திருமண வரவேற்பில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தாமதமாக பங்கேற்று, விழாவில் புகைப்படங்கள் கூட எடுத்துக்கொள்ளாமல் வித்யாசமாக இருந்துள்ளார் என தகவல்கள் வெளியாகின.

rajinikanth

ஆனால் அதற்கு ரஜினியின் ரசிகர்களும், தனுஷின் ரசிகர்களும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான அவரது கெட்டப் வெளியே பரவி விடக்கூடாது என்பதற்காக  புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளவில்லை என கூறினார்கள்.

மேலும், ரஜினிகாந்திற்கு தொழில் பக்தி அதிகம். இதை நடிகர் தனுஷும் பின்பற்றி வருகிறார். தொழில் பக்தி அதிகம் உள்ளவராக தனுஷ் இருப்பதால் தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நின்றிருக்கிறார் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.