வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
ப்பா.. செம ஸ்டைலிஷ் லுக்கில் பாலிவுட் ஹீரோயின் போல கெத்து காட்டும் டிடி! எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெறுள்ளது. இவரது கலகலப்பான பேச்சுக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் டிடி வெள்ளித்திரையிலும் கால்பதித்து பல படங்களில் சிறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் அவர் தற்போது மாஸான, செம ஸ்டைலான லுக்கில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர், உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், நன்றாக உடை அணிந்து கொள்ளுங்கள். அதுவே உதவும் என்பதை போல மிகவும் தன்னம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.