#Breaking: சிறுத்தை தாக்கி இளைஞர் பரிதாப பலி., நீலகிரியில் சோகம்.!



  in Nilgiris Youth Dies Cheetah Attack 

மஞ்சூர், எடக்காடு பகுதியில் சிறுத்தை தாக்கி இளைஞர் பலியான சோகம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர், முக்கூர்த்தி - அவலாஞ்சி வெளிமண்டல வனப்பகுதியில் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வரையாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதனிடையே, சமீபகாலமாக அப்பகுதியில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் அதிகம் உலாவி வந்துள்ளன. இந்நிலையில், இன்று அங்குள்ள கிராமத்தை சேர்ந்த சதிஷ் என்ற இளைஞர், தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். 

இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி.. விழுப்புரத்தில் சோகம்.!

சிறுத்தை தாக்கி சோகம்

அப்போது, அவரை சிறுத்தை ஒன்று தாக்கியதாக தெரியவருகிறது. இதனால் அவர் அலறித்துடித்த நிலையில், சிறுத்தை தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

death

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இளைஞரை கொன்ற புலியை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கிண்டி: மதுபோதையில் தண்டவாளத்தில் அலட்சியம்; நண்பர்கள் இருவர் பலி.!