திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட உண்மையாவே சந்தானம் இப்படிப்பட்டவரா?.. பிரபல தமிழ் காமெடி நடிகர் ஓபன்டாக்..!!
நடிகர்கள் சந்தானம், சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ராம் சிங், மாசோம் ஷங்கர் உட்பட பலர் நடித்து, ஜூலை 28ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் DD Returns.
நகைச்சுவை - பேய் கதையம்சம் கொண்ட DD Returns படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி வழங்கியுள்ளார். படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்கில் வெளியாகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சந்தானம் குறித்து தெரிவித்தது அவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், "சந்தானம் எப்போதும் அனைவர்க்கும் தேவையான இடத்தை வழங்குவார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனியே தெரியவேண்டும் என முனைப்புடன் செயல்படுவார்.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதைப்போல, சந்தானத்துடன் சேர்ந்தால் காமெடி நன்றாக இருக்கும். லொள்ளு சபாவில் இருந்து தற்போது வரை பக்காவான டீமுடன் உழைத்து மக்களை மகிழ்வித்து வருகிறார்" என கூறினார்.