திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
DD Returns: அட்டகாசமாக நகைச்சுவை, திகில் காட்சிகளுடன் வெளியானது DD Returns படத்தின் டிரைலர்; சந்தானத்தின் ரசிகர்கள் குஷியோகுஷி..! லிங்க் உள்ளே.!
நடிகர் சந்தானம், சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ராம் சிங், தீபா சங்கர், மானசி, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் DD Returns.
இந்த படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்கி இருக்கிறார். ஆர்.கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் படம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. DD Returns திரைப்படம் உலகளவில் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு மேல் டிடி ரிட்டன்ஸ் (DD Returs) படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. படத்தின் டிரைலர் நகைச்சுவையாக இருக்கிறது, திரையரங்கில் வயிறுகுலுங்க சிரிக்கலாம் என சந்தானத்தின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.