மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமந்தாவின் மாமனார் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் நாகார்ஜுன். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
தெலுங்கானா மஹாபப் நகர்,பப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் 40 ஏக்கர் கொண்ட பண்ணை வீடு ஒன்றை நாகார்ஜுனா வாங்கிஇருந்தார். மேலும் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த அந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக அவர் சமீபத்தில் பணியாளர்கள் சிலரை அங்கு அனுப்பியுள்ளார்.
அப்பொழுது வீட்டின் உள்ளே துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்த பணியாளர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் உடல் பாகங்கள் எலும்புக்கூடாக ஆங்காங்கு கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த உடலை மீட்டுள்ளனர். மேலும் இறந்தது யார், எந்த ஊர் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து இறந்தது யார் என போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அதாவது பாப்பிரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த சக்காளி குண்டு என்ற 30 வயது நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் அவரே அங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி விட்டுதான் அந்த நபர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.