மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிசம்பர் 29 அன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
வாரம் வெள்ளிக்கிழமைகளில் பல படங்கள் திரையரங்கில் வெளியாகுவது இயல்பானது. நடப்பு வாரம், இந்த ஆண்டின் இறுதி வாரமாகவும் அமைந்துள்ளது. உலகமே 2024 புத்தாண்டை வரவேற்க காத்திருகிறது.
இதனை முன்னிட்டு டிசம்பர் 29ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து இன்று காணலாம்.
ரூட் நம்பர் 17: அபிலாஷ் ஜி தேவன் இயக்கத்தில், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், அருவி மதன், ஹரீஷ், அஞ்சு பாண்டியா, அகில் பிரபாகர் உட்பட பலரும் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ரூட் நம்பர் 17. க்ரைம் - தில்லர் பாணியில் படம் உருவாகியுள்ளது.
சரக்கு: ஜெயக்குமார் இயக்கத்தில், நடிகர்கள் மன்சூர் அலிகான், வலீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் சரக்கு. மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
நந்திவர்மன்: ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில், ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுரேஷ் ரவி, ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஜெஎஸ்கே கோபி, முல்லை கோதண்டம் உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் நந்திவர்மன். சோழர்களின் வரலாற்றை தொடர்ந்து, பல்லவர்களின் வரலாறு சார்ந்த படமாக நந்திவர்மன் உருவாகியுள்ளது.
வட்டாரவழக்கு: மதுரா டாக்கீஸ், சக்தி பிலிம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் வட்டார வழக்கு. இசைஞானி இளையராஜாவின் இசையில் படம் உருவாகியுள்ளது.
மதிமாறன்: மந்த்ரா வீரபாண்டியனின் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில், பாப்பின் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மதிமாறன். படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா, வெங்கட் செங்குட்டுவன், ஆராத்யா, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரைம் - தில்லர் பாணியில் படம் உருவாகியுள்ளது.
இதனைத்தவிர்த்து, யாவரும் நலமே, ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, ஜெய் விஜயம், பேய்க்கு கல்யாணம், மூத்த குடி, மூன்றாம் மனிதன் ஆகிய படங்களும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.