திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேலையை காட்ட துவங்கிய தீபிகா படுகோன்; நிபந்தனைகளை கடைபிடிப்பாரா ரன்வீர்!
ராம்லீலா,பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.
ராம்லீலா படத்தில் நடித்த போதே காதலில் விழுந்த அந்த ஜோடி 6 வருடத்திற்கு பின் கடந்த நவம்பரில் திருமணம் செய்தனர். இரண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.
பொதுவாக திருமணத்திற்கு பின் பெண்கள் கணவனின் வீட்டிற்கு செல்வது தான் வழக்கம். ஆனால் தீபிகா படுகோன் தனது திருமணத்திற்கு பின் ரன்வீர் வீட்டிற்கு செல்லவில்லை. மாறாக ரன்வீர் சிங் பல வருடங்களாக தீபிகா குடியிருக்கும் வீட்டிற்கு மாறி விட்டார்.
“திருமணம் என்பது ஒரு பொறுப்பு, அது ஒரு விருப்பம் அல்ல, எனவே நீங்கள் செய்ய நினைப்பதை செய்யுங்கள்”என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.மேலும் “தீபிகாவின் முன்னுரிமை தான் எனக்கு முக்கியம், அவர் வீட்டில் தான் வசதியாக இருக்கிறார்,எனவே அவரை நான் இடமாற்றம் செய்ய விரும்பவில்லை” என்றும் உருக்கமாக தெரிவித்தார் ரன்வீர்.
இந்நிலையில் தீபிகா படுகோன் தன் கணவர் ரன்வீர் சிங்கிற்கு 3 நிபந்தனைகளை வித்த்துள்ளார். இரவு மிகவும் தாமதமாக வீடு திரும்பக் கூடாது, சாப்பிடாமல் வீட்டை விட்டுக் கிளம்பக் கூடாது, தன்னுடைய போன் காலை மிஸ்டு காலாக மாற்றிவிடக் கூடாது என்பதே அந்த 3 நிபந்தனைகள் ஆகும்.