#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. இந்த நடிகைக்கு இவ்வளவு சம்பளமா? இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை !
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையான தீபிகா படுகோனே 2007 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'ஓம் சாந்தி ஓம்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பு மாடல் அழகியாக புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்களின் படங்களில் நடித்து வந்தார் இவர்.
2006ம் ஆண்டு கன்னட சினிமாவின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பாலிவுட் இயக்குனர் ஃபரா கானின் 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு 'பிலிம் ஃபேர்' விருதுகளில் தீபிகாவுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் வாங்கி கொடுத்தது. மேலும் பாலிவுட்டில் இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர், பாஜிராவ் மஸ்தானி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தன.
பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து வந்த இவர் நவம்பர் 14 2018 ஆம் ஆண்டு ரன்வீரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஷாருக்கான் ஜோடியாக இவர் நடித்திருந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தின் வசூல் ஆயிரம் கோடிகளை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீபிகா படுகோனேவின் சினிமா மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. அவர் தனது அடுத்த படத்திற்கு சம்பளமாக 18 கோடி ரூபாயை நிர்ணயித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி இருக்கிறார் தீபிகா படுகோனே. இவருக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் கங்கனா ராணாவத். மூன்றாவது இடத்தில் இருப்பவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா.