#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சீரியல் மூலம் மீண்டும் சன் டீவியில் வரும் தெய்வமகள் அண்ணியார்! இந்தமுறை எந்த சீரியல் தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் மக்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஓன்று தெய்வமகள். தொடரின் நாயகியை விட வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அண்ணியார் காயத்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார்.
இவருக்குக்காக சில ரசிகர்கள் கோவில் கூட கட்டினர். இந்நிலையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் நந்தினி என்ற தொடரில் மந்திர தந்திரம் செய்யும் வில்லியாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
நந்தினி தொடரும் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. அதன்பின்னர் எந்த சீரியலிலும் தலைகாட்டாமல் இருந்த நம்ம அண்ணியார் காயத்ரி தற்போது மீண்டும் சன் தொலைக்காட்சியில் அசத்தலாக கம் பேக் கொடுத்துள்ளார்.
நடிகை குஷ்பூ முக்கிய வேடத்தில் நடித்துவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற நாடகத்தில் வில்லி நடிகை சகுந்தலா தேவிக்கு தங்கையாக அறிமுகமாகியுள்ளார். அண்ணியார் மீண்டும் பிரபல நாடகம் மூலம் நடிக்க வந்துள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.