மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிமாண்டி காலனி 2 படத்தின் அப்டேட்.. இன்று வெளியாகிறது 'நரக மேளங்கள்' பாடல்.!
கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி.
ரூ.2 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பேய் படமான டிமாண்டி காலனி, வெளியீடுக்கு பின் மக்களிடம் கிடைத்த வரவேற்பால் ரூ.18 கோடியை கடந்து வசூல் சாதனை செய்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி, மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலரும் நடித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டிமாண்டி காலனி 2 படத்தின் 'நரக மேளங்கள்' என்ற பாடல் மாலை 5 மணியளவில் வெளியாகிறது. சாம் சிஎஸ் இசையில் பாடல் உருவாகியுள்ளது.
Get ready to Vibe🕺🏻to the “Beats of Hell” 🥁💥#NaragaMelangal 🥁🥁#TheRecapSong ⏪ from #DemonteColony2 will haunt you from 5PM Today!!
— Think Music (@thinkmusicindia) January 4, 2024
A @SamCSmusic musical🎼#VengeanceOfTheUnholy#DarknessWillRule
@btguniversalofficial @bobbyvinodb @manojbeno @ajaygnanamuthu… pic.twitter.com/RDzgWb9h2d