#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விமலின் தேசிங்கு ராஜா 2 படத்தின் அட்டகாசமான முதற்பார்வை போஸ்டர்..!
கடந்த 2013 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில், நடிகர்கள் விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம்புலி, ரவி மரியா உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் தேசிங்குராஜா.
இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். படம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக நகைச்சுவையில் கலக்கி பலரின் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் (Desingu Raja 2) ஆனது உருவாக்கி இருக்கிறது. நேற்று படத்தின் முதல் பார்வை புகைப்படங்கள் படக்குழுவால் வெளியிடப்பட்டது. இந்த படம் மே மாதம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரவிமரியா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உட்பட பல காமெடி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்