#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பிரபல சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி! செம குஷியான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு ஜோடியாக காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தேவயானி . இப்படத்தில் அவர் நடித்த கமலி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து தேவயானி பெரிய வீட்டு மாப்பிள்ளை, சூரியவம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய், வல்லரசு, அப்பு, ஆனந்தம், ஃப்ரெண்ட்ஸ், பஞ்சதந்திரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு தாவிய அவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடிமுல்லை, முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை தேவயானி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, வங்காளம், கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இவ்வாறு புகழின் உச்சியில் கொடிகட்டி பறந்த நடிகை தேவயானி தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சன்டிவியில் பல பிரபலங்கள் நடித்து ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி தொடரில் நடிக்கவுள்ளார். இந்த தொடரில் அவர் சௌந்தரவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
#கோலங்கள் அபி #ராசாத்தி சௌந்தரவள்ளியா மாஸா ரிஎன்ட்ரி கொடுக்கப் போறாங்க. மிஸ் பண்ணாம பாருங்க.
— Sun TV (@SunTV) December 1, 2019
ராசாத்தி உங்கள் #சன்டிவி - யில், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்..!#SunTV #SociallySun #Adithya #Rasathi #RasathiOnSunTV #DevayaniReentry pic.twitter.com/3Z8QgZasT3