மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் - ஐஸ்வர்யா.. காரணம் இதுதானா?..! தீயாய் பரவும் புகைப்படம்..!!
18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முடிவுகட்டிய தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி, கடந்த ஜனவரி 17 ஆம் தேதியில் தங்களின் விவகாரத்தை அறிவித்து இருந்தது. இது அவர்களின் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்வலையை பதிவு செய்தது.
இருவரின் பிரிவைத்தொடர்ந்து அவரவர் வாழ்க்கை பயணத்தை தனித்தனியே தொடங்கிய நிலையில், தனுஷ் படங்களில் நடிக்க தொடங்குவதை அதிகரித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இயக்குனர் பணிகளை நீண்ட வருடத்திற்கு பின்னர் கையில் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தங்களின் மகனுடன் ஓரிடத்தில் இருப்பது குறித்த போட்டோ வைரலாகி வருகிறது. இருவரும் பிரிந்த பின்னர் தங்களின் மகனான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரிவுக்கு பின்னர் இருவரும் ஒரேஇடத்தில் முதல் முறை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். தம்பதியின் மூத்த மகன் யாத்ரா பள்ளி நிகழ்ச்சியில் விளையாட்டு அணியின் தலைவராக நிர்வகித்த விழா நிறைவில் இருவரும் புகைப்பட எடுத்துக்கொண்டுள்ளனர்.