மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. அசுரன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். அவரது நடிப்பில் வெளிவந்து ஏராளமான திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தனுஷின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இருப்பது அசுரன்.
2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மக்களிடையே பெருமளவில் பிரபலமானது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அசுரன் படத்தில் நடிக்க தனுஷ் 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.