மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ராசாவே உன்ன காணாத நெஞ்சு.. " இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயகாந்துக்காக மனமுருகி தனுஷ் செய்த காரியம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன்,ஜான் கொக்கேன்,சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது.இந்நிலையில் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், நேற்று கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும்
நடிகர் தனுஷ் 'ராசாவே உன்ன காணாத நெஞ்சு' பாடலை பாடி நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார். உடனே ரசிகர்களும் அவருடன் சேர்ந்து அந்த பாடலை மனமுருகி பாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.