மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமாவில் அறிமுகமாகும் தனுஷின் மூத்த மகன்? வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 50வது திரைப்படத்தை அவரே இயக்கி, நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, அமலா பால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் செல்வராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக தனுஷ் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தின் மொத்த காட்சிகளையும் வெறும் 110 நாட்களிலேயே முடித்துள்ளார். இதனையடுத்து தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்கூடிய தீவிரமாக வேலை செய்து வருகிறது.
அதன்படி இந்த திரைப்படத்தை வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே தனுஷின் 50வது திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் இளம் வயது தனுஷின் கதாபாத்திரத்தில் அவரின் மூத்த மகன் யாத்ரா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தனுஷின் மகன் சினிமாவில் அறிமுகமாகவுள்ளர்.