மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது மகன்களுக்காக மேடையில் தாலாட்டு பாடல் பாடிய நடிகர் தனுஷ்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ....
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து திருச்சிற்றாம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இவரின் அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை மத்தியில் சோகத்தை ஆழ்த்தியது.
இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த இளையராஜாவின் ராக் வித் ராஜா என்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் கலந்து கொண்டார். அப்போது மேடை ஏறிய தனுஷ், “நிலா அது வானத்து மேலே” பாடலை தனது மகன்களுக்காக மாற்றி ”கண் மூடி தூங்கிடு பூவிழி மானே” என்ற தாலாட்டு பாடலாக பாடினார். தற்போது அந்த பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mesmerizing voice 💯
— Anbuselvan™🔥 (@Raj_twetz) March 19, 2022
Especially ilayaraja song !@dhanushkraja 😍❤#RockWithRaja #Dhanush pic.twitter.com/Nqxy97X4e5