மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 வயது குறைத்து, ஸ்கூல் பையனாக மாறிய தனுஷ்! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது டாப் ஹீரோவாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் தனுஷ். இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என திரையுலகையே கலக்கி வருகிறார்.
ஹாலிவுட்டில் தி ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ், ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடித்த 'தி கிரே மேன்' திரைப்படம் ஜூலை நெட்ஃபிக்ஸில் வெளியிடப்படவுள்ளது. மேலும் தனுஷ் கைவசம் செல்வராகவனின் நானே வருவேன், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்
திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன.
மேலும் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி படத்தில் மாஸ்டர் மற்றும் ஸ்டூடண்ட் வேடத்தில் நடிக்கிறாராம். இந்நிலையில் பள்ளிப் பையனைப் போல பத்து வயது குறைந்து இளமையாக தோன்றுவதற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளாராம். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.