திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணன் மனைவியின் கழுத்தை நெறித்த தனுஷ்! ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்ராசிட்டி! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தி கிரே மேன், திருச்சிற்றம்பலம் படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் தனுஷ் தனது மனைவியை ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்து ஷாக் கொடுத்தார்.
இந்த நிலையில் தனுஷ் அவ்வப்போது தனது பெற்றோர்கள் மற்றும் அண்ணன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி நானே வருவேன் படத்தில் சில பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாலஞ்சலியை விளையாட்டிற்கு ஜாலியாக கழுத்தை நெறிக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.