மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்.! கதாநாயகன் யார் தெரியுமா.?
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் தனுஷ். அதன் பிறகு 2003-ஆம் ஆண்டு தனுஷ், சாயாசிங் நடிப்பில் வெளியான திருடா, திருடி திரைப்படத்தின் மூலமாக தனக்கென தனி முத்திரை பதித்தார் தனுஷ்.
அதன் பிறகு காதல் கொண்டேன், தேவதையை கண்டேன், சுள்ளான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக மாறினார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கரம் பிடித்தார். இதன் பிறகு அவர் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிப்போனார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய 50-வது திரைப்படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கிறார். இதன் பிறகு தன்னுடைய அக்கா மகனை கதாநாயகனாக வைத்து தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக தெரிகிறது.
இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. இந்த நிலையில் தான், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளார் என்று அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷுடன் சரத்குமார் இருக்கும் ஒரு குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.