#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாயை கொடுத்து வம்பில் மாட்டிய சதீஷ்! சொன்னது எல்லாம் பொய்யா.! உண்மையை உடைத்த தர்ஷா குப்தா.!
யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இந்த திரைப்படத்தை வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஹாரர் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா மற்றும் டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஓ மை கோஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது பேசிய சதீஷ், மும்பையை சேர்ந்த சன்னி லியோன் கலாச்சாரப்படி உடையணிந்து வந்துள்ளார். ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்துள்ளார் பாருங்கள் என கலாய்த்து பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சதீஷ் தர்ஷா அப்படி சொல்ல சொன்னதால்தான் நான் மேடையில் அவ்வாறு பேசினேன். இது நண்பர்களுக்குள் நடக்கும் ஜாலியான பேச்சு என நீண்ட விளக்கமளித்துள்ளார். ஆனால் அதனை தர்ஷா மறுத்துள்ளார்.
Sathish is this good way to turn on me, that I asked u to tell like this in stage? It's very strange. Yaaravathu enna pathi, stage neenga asingama pesunganu solluvangala?? Enakum annaiku avlo hurt uh tha irunthuchu, but na atha perusa kaatikala. But ipo ipadi solrathu, not good.
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) November 10, 2022
அவர் வெளியிட்டுள்ள பதிவில், சதீஷ் நல்லா அப்படியே என்மேல் திருப்பி பேசுகிறீர்கள். நான் மேடையில் அப்படியா உங்களைச் சொல்ல சொன்னேன்? யாராவது மேடையில் என்னை பற்றி அசிங்கமாக பேசுங்கள் என அவர்களே சொல்வார்களா? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ கஷ்டமாக இருந்தது. ஆனால் அதனை நான் சிறிதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போ நீங்கள் இப்படி சொல்வது சரியில்லை என கூறியுள்ளார்.