ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மறைந்த தனது அண்ணன் சிரஞ்சீவியின் படத்திற்கு டப்பிங் பேசும் தம்பி! பாதியிலேயே நிறுத்தியது ஏன்? அவரே கூறிய கண்கலங்க வைக்கும் காரணம்!
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் நடிகர் அர்ஜுனின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் நான்கு படங்கள் தயாராகி வந்தது.
சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜ். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தார். அவரது இந்த மரணம் குடும்பத்தினர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பி துருவா சார்ஜா. இவர் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது அண்ணன் சிரஞ்சீவி கடைசியாக நடித்திருந்த ராஜமார்த்தாண்டா என்ற படத்திற்காக டப்பிங் பேசிய நிலையில், சில காலங்கள் கழித்து வேலையை செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அண்ணன் சிரஞ்சீவியின் ராஜமார்த்தாண்டா திரைப்படத்திற்கு டப்பிங் பேச ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர் நடித்த காட்சிகளை பார்த்தபோது மிகுந்த வேதனைக்குள்ளாகி உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். என்னால் பேச முடியவில்லை. அதனால் சில காலங்கள் கழித்து டப்பிங் பேசலாம் என முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.