மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எந்த நாட்டு இளவரசி இவள்" வெளியான துஷாராவில் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்..
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். இவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்தப் படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது, அநிதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் பட வாய்ப்புக்காக இவர் பட்ட கஷ்டங்களை பல இடங்களில் பகிர்ந்து கொள்கிறார். தற்போது தனது விடாமுயற்சியின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் துஷாரா.
மேலும், தனுஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் 'ராயன்' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக நடிகைகள் போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதன்படி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் துஷாரா விஜயன், தற்போது தனது புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அப்புகைப்படத்தில் ராணி போல் அலங்காரம் செய்து போட்டோஷூட் செய்திருக்கிறார். புகைப்படத்தில் ரசிகர்கள் எந்த நாட்டு இளவரசி இவள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.