"அந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை" பேட்டியில் மனம் திறந்த துஷாரா விஜயன்..



dhusara-vijayan-like-to-act-action-movies

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலமே பிரபலமானார்.

actress

இந்த திரைப்படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர் பேட்டியில் கலந்து கொண்ட துஷாரா விஜயனிடம், பத்திரிகையாளர்கள் அதிக படங்களில் ஏன் நடிப்பதில்லை என்று கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த துஷாரா விஜயன், "நான் கதைகளை தேர்வு செய்வதில் எப்பொழுதும் கவனமாக இருப்பேன். நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தவை ஆகும்.

actress

இதேபோன்று தற்போது நான் நடித்திருக்கும் 'கழுவேத்தி மூர்கன்' திரைப்படத்தில் கவிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் கனெக்டாவதால் இந்த கதையை தேர்வு செய்தேன். மேலும் எனக்கு ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாகவும் நடிப்பேன் என்று பேட்டி அளித்திருக்கிறார்.