#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதியின் ஆட்டம் ஆரம்பமானதா.? நடந்தது என்ன.?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட ஜெயிலர் பட குழுவினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணாத்த மற்றும் தர்பார் ஆகிய இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு சிறிது பிரேக் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் தற்போது களமிறங்க இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய குட்டிக்கதை ரசிகர்களிடம் வைரலானது . இந்நிலையில் ஜெயிலர் பட ஆடியோ வெளியிட்ட போது நடந்த ஒரு சில சம்பவங்கள் ரஜினி ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயிலர் பட விழாவின் போது இடையில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் வரும் அரபிக் குத்து பாடல் ஒளிபரப்பானதால் டென்ஷன் ஆன சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அந்தப் பாட்டை உடனடியாக நிறுத்தும்படி கூச்சலிட்டனர்.
Thalapathy Vijay rules at Murattu Kaalai's stage.
— Blue Sattai Maran (@tamiltalkies) July 28, 2023
தரமான சம்பவம். pic.twitter.com/31rFTJgEgP
மேலும் நிகழ்ச்சியின் போது விடிவி கணேஷ் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தளபதியை புகழ்ந்து பேசியதற்கும் ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடந்து முடிந்த ஜெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடைபெற்ற இது போன்ற நிகழ்வுகள் தளபதி விஜய் மற்றும் ரஜினிக்கு இடையேயான போட்டியை அதிகரித்து இருக்கிறதா என சினிமா விமர்சகர்கள் கேள்வியை முன் வைத்துள்ளனர்.