#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோட் படத்தில் ஹீரோ விஜய் இல்லையாம்.. இவர் தானாம்.! சஸ்பென்ஸ்.!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வழக்கமாக வெங்கட் பிரபுவின் திரைப்படத்தில் நடிக்க கூடிய வைபவ் மற்றும் பிரேம்ஜி இருவரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தற்போது சென்னையில் கோட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஹீரோ விஜய்யின் பட காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றது.
இதில் நடிகர் விஜயுடன் பிரபுதேவா, அஜ்மல் மற்றும் பிரசாந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதில் அஜ்மல், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டருடன் விஜய் கையில் துப்பாக்கி ஏந்தியபடி மிலிட்டரி உடையில் நின்று இருப்பார். இதை கண்ட பலரும் விஜய்க்கு பின்பக்கத்தில் பிரசாந்த் நிற்பதா.? சாக்லேட் பாய்க்கு வந்த சோதனையை பாருங்கள் என்று கிண்டல் செய்தனர்.
இதில் ஸ்டாண்ட் இயக்குனராக இருக்கும், திலீப் சுப்பராயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் "கோட் திரைப்படம் வெங்கட் பிரபுவின் திரைப்படமாக முழுக்க முழுக்க இருக்கும். இதில் அவர்தான் ஹீரோ." என்று தெரிவித்துள்ளார். பொதுவாக விஜய் திரைப்படம் என்றாலே அதில் அவரது குறுக்கீடு அதிகம் இருக்கும் என்று பேசப்படும்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட விஜய் தலையிட்டது தான் அந்த படம் சரியாக ஓடாததற்கு காரணம் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு இயக்குனர்களின் சுதந்திரத்தில் அதிகமாக தலையிடுவதை விஜய் குறைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த கோட் படத்தில் விஜய் சுத்தமாக தலையிடவில்லை என்று தெரிய வருகிறது.