திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிம்பு தேவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் யோகி பாபு.!
சிம்புவுடன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு போட் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் டீசர் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகிருக்கிறது இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் சிம்பு தேவன்.
தற்போது அவர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்திற்கு போட் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார், கடலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில்தான் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 5 மொழிகளில் வெளியாகும் இந்த டீசரை தமிழ் மொழியில் விஜய் சேதுபதி வெளியிடுகிறார். அதேபோல மலையாளத்தில், பிரித்விராஜும், ஹிந்தியில் அமீர்கானும், தெலுங்கில் நாக சைதன்யாவும், கன்னடத்தில் கிச்சா சுதிப்பும் வெளியிடுகிறார்கள்.