மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவதூறு, அவமானம் கொடுத்தாலும்., அன்பு வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி: மெளனம் பேசியதே இயக்குனர் நெகிழ்ச்சி.!
கடந்த 2002-ம் ஆண்டு அமீர் சுல்தான் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா, லைலா உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தை அபராஜித் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருந்தது.
21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்றளவும் மௌனம் பேசியதே திரைப்படம் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. X தளத்தில் நேற்று அமீர் தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய தமிழக மக்களுக்கு அன்பு கலந்த வணக்கம். ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்த அவதூறுகள், அவமானங்களை பொதுவெளியில் அன்பளிப்பாக கொடுத்தனர்.
இதனால் நான் சோர்ந்து விடாமலும், துவண்டு விடாமலும் இருக்கும் வகையில் தன்னம்பிக்கை, அன்பு, ஆதரவை அளித்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. ஊடகத்தினருக்கும் நன்றி. இயக்குனராக எனக்கு அடையாளத்தை பெற்றுதந்த முதல் திரைப்படம் மௌனம் பேசியதே.
அந்த படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. சென்னை நோக்கி சினிமாவை எதிர்பார்த்து படை எடுத்த பலரின் கனவுகள் நிறைவேறியது இல்லை. அப்படியான கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து தூக்கி உயர்த்தியது மௌனம் பேசியதே திரைப்படம் தான்.
அதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு, வெங்கி நாராயணன் ஆகியோருக்கு நன்றி. என்னுடன் பயணித்து வெற்றிக்கு காரணமான சூர்யா, திரிஷா, லைலா, ராம்ஜி, யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும் நன்றி. திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் எனது நன்றிகள்.
எனது திரைப்படப் பயணம் தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும், நான் குறைவான படங்களை இயக்கி இருந்தாலும் என்னை மனதில் நிறுத்திக்கொண்ட திரைத்துறை ரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.