திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நீ முதுகில் குத்தினாலும் நான் உன் முன் திமிரோடு தான் நிற்பேன்" பதிலடி கொடுத்த அமீர்..
2002ம் ஆண்டு "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து ராம், பருத்தி வீரன், ஆதி பகவன் ஆகிய படங்களை இயக்கியுள்ள அமீர் சில படங்களில் நடித்தும் உள்ளார். மேலும் டீம்ஒர்க் ப்ரோடக்ஷன் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.
சமீபத்தில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி அமீர் பரபரப்பை கிளறியிருந்தார். மேலும் பருத்தி வீரன் படத்தால் எனக்கு 2கோடி கடன் உள்ளது. சிவகுமார் குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு.
அதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கெடுத்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "அமீர் தான் என்னை ஏமாற்றி விட்டார். அமீர் பஸ்ட் காபி அடிப்படையில் தான் எனக்கு பருத்திவீரன் படத்தை இயக்கி கொடுத்தார்.
ஆனால் இல்லாத கணக்கையெல்லாம் காட்டி என்னிடம் பணம் பறித்து ஏமாற்றிவிட்டார்" என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமீர் "நன்றி மறந்து நீ என் முதுகில் குத்தினாலும், நான் உன் எதிரே திமிரோடு நிற்பேன். உன்னைப் போல் நடிகர்களின் பின் ஒளியமாட்டேன்" என்று கூறியுள்ளார்.