திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் ரசத்தை தேனாக வழங்கி விருந்துபடைத்த இயக்குனர் அட்லீக்கு இன்று குவா., குவா டே... குவியும் வாழ்த்துக்கள்.!
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அருண்குமார் என்ற அட்லீ குமார். கடந்த செப்டம்பர் 21 1986 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இயக்குனர், எழுத்தாளர், பட தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்ட அட்லி, இயக்குனர் சங்கரின் உதவியாளராக பணியாற்றி வந்தவர். இவர் எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய படங்களில் சங்கருக்கு உதவியாளராக இருந்து வந்தார்.
அதனைத்தொடர்ந்து, நடிகர் ஆர்யா, ஜெய், நடிகைகள் நஷ்ரியா, நயன்தாரா ஆகியோரை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி பல காதல் நெஞ்சங்களை ஆட்கொண்ட அட்லீக்கு முதல் படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான விஜய் அவார்ட் கிடைத்தது.
இதன்பின்னர், நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த அட்லீ, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானின் ஜவான் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் இயக்குனர்களில் விஜய் அவார்ட்ஸ், ஐஃபா உற்சவம், சைமா போன்ற பல விருதுகளை பெற்ற இயக்குனர் அட்லீ, கடந்த 2014-ல் கிருஷ்ண பிரியா என்ற பெண்ணையும் திருமணம் செய்து, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இன்று இயக்குனர் அட்லீ-க்கு பிறந்தநாள். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.