#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
ஹீரோயினுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இயக்குனர் பாலா.? தெரிந்து ஓடும் கீர்த்தி ஷெட்டி..

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான பாலா பல வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து தமிழில் அளித்து வருகிறார். பல பிரபல நடிகர்களும் இவருடைய படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் நடிகை கீர்த்தி செட்டி அதிகமாக சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறினாலும் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.
பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் கீர்த்தி செட்டி நடிக்கவிருந்த திரைப்படம் தான் 'வணங்கான்' இப்படத்தில் படபிடிப்பின் போது சூர்யாவிற்கும் பாலாவிற்கும் மோதல் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக சூர்யா இப்படத்தில் இருந்து விலகி விட்டார்.
இதன்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுடன் கீர்த்தி செட்டியும் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே இருந்த உறவு குறித்து கீர்த்தி செட்டி கூறிய வீடியோ வைரலாகி பரவியது.
இது போன்ற நிலையில், பாலா 'வணங்கான்' திரைப்படத்தை அருண் விஜயை வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். தற்போது கீர்த்தி செட்டியை மீண்டும் நடிக்க வைப்பதற்காக பல கோடிகளில் சம்பளங்கள் கொடுக்கிறேன் என்று கூறினாலும் கீர்த்தி செட்டி மறுத்துவிட்டாராம். இவ்வாறாக கோலிவுட் திரைத்துறையினர் கிசுகிசுத்து வருகின்றனர்.