திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இந்த தவறை யாரும் கவனித்திருக்க மாட்டீங்க" உண்மையை உடைத்த பாரதிராஜா.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் பாரதிராஜா. இவர் தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இயக்குனராக இருந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளிவந்த 'சிவப்பு ரோஜாக்கள்' திரைப்படம் மிகப் பெரும் ஹிட்டாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இயக்குனர் பாரதிராஜாவின் படம் என்றாலே காதலும், அட்டகாசமான நடிப்பும் கலந்து கிராமிய வாசனையுடன் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் 80களில் இயக்கிய படங்கள் கூட இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஆனால் கிராமத்து கதை தான் பாரதிராஜாவால் இயக்க முடியும் என்ற பெயரை மாற்றியது 'சிகப்பு ரோஜாக்கள்' திரைப்படம் தான்.
மேலும் கதாநாயகனாக நடித்த கமல் இப்படத்தின் ஹீரோவா, வில்லனா என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். பாரதிராஜாவின் சமீபத்திய பேட்டியில் சிகப்பு ரோஜாக்கள் படத்தைக் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறியிருப்பார்.
அதாவது ஸ்ரீதேவிக்கு கமல் குறித்து உண்மை தெரியவரும் காட்சியில், ஸ்ரீதேவி தனியாக வீட்டில் இருப்பார். அப்போது வெளியே மழை வருவதை ஜன்னல் வழியாக பார்ப்பார். அந்த நேரத்தில் மண்ணிலிருந்து இறந்து போன பெண்ணின் கைகள் வெளியே வருவதை ஸ்ரீதேவி பார்த்துவிடுவார். இதை பார்த்து பயந்து போய் ஒரு அறையில் நுழைவார். அந்த அறையில் தான் கமலஹாசன் தன்னை பற்றிய அத்தனை உண்மையையும் மறைத்து வைத்திருப்பார். அந்த காட்சியில் கமலஹாசனை குறித்தும் அவருக்கு சிறுவயதில் நடந்த விஷயங்களை குறித்தும் பிளாஷ்பேக் ஒளிபரப்பாகும். கமலின் சிறுவயது குறித்து கமலஹாசன் பிளாஷ்பேக்கில் தானே வரவேண்டும் உண்மை தெரியாத ஸ்ரீதேவியின் பிளாஸ்பேக்கில் எப்படி வந்தது என்று யாரும் கேக்கவில்லை. அந்த தவறு படத்தில் செய்துவிட்டேன் என்பதை பாரதிராஜா குறிப்பிட்டிருப்பார். ஆனால் படம் செம்ம ஹிட்டானதால் யாரும் இந்த தவறை கண்டு கொள்ள வில்லை என்று சிரித்துக்கொண்டே பேசியிருப்பார்.