#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எங்கட அந்த ம..." சிம்புவை ரைட் லெஃப்ட் விட்ட இயக்குனர்... வாலை சுருட்டிக் கொண்ட சிம்பு... பயில்வான் பேட்டி.!
தமிழ் சினிமாவில் சாமி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. அதனைத் தொடர்ந்து கோவில், ஆறு, சிங்கம் என வரிசையாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர். இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த கோவில் திரைப்படம் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படமானது.
இந்தத் திரைப்படத்தில் சிம்பு, சோனியா அகர்வால், ராஜ்கிரன், நாசர், மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்த காலகட்டங்களில் தனது விரல் வித்தைகளை காட்டி வந்து சிம்பு இந்தப் படத்தில் தான் முதிர்ச்சியான நடிகராக அமைதியாக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்திருக்கிறார் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். கோவில் திரைப்படத்திற்கு சிம்புவை ஒப்பந்தம் செய்யும்போதே சரியான நேரத்திற்கு ஷூட்டிங்க்கு வர வேண்டும் என்ற கட்டளையுடன் தான் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள் ஹரி. அப்படி இருந்தும் திடீரென மூன்று நாட்கள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறார் சிம்பு.
இதனால் கடும் கோபத்திலிருந்த ஹரி தனது உதவி இயக்குனரை அழைத்து "எங்கடா அந்த மடப்பைய" உனக்கு எத்தனை மணிக்கு ஷூட்டிங் சொன்ன இப்போ மணி 11:15 ஆகுது. சம்பளம் ஒழுங்காக தருகிறேனா இல்லையா என ஜாடையாக திட்டி இருக்கிறார்? சிம்புவிற்கும் இது தன்னைத் தான் திட்டுகிறார் என்று உணர்ந்திருக்கிறது. அன்றிலிருந்து சரியாக சூட்டிங்க்கு வர ஆரம்பித்திருக்கிறார் சிம்பு. மேலும் ஒரு நாள் இரவு நடிகை சோனியா அகர்வால் உடன் மது குடித்துவிட்டு ஆட்டம் போட்டாலும் மறுநாள் காலை சரியான நேரத்திற்கு சூட்டிங்குக்கு வந்து விட்டாராம். இந்த தகவல்களை பயில்வான் ரங்கநாதன் ஒரு செய்தி சேனலுக்கு பகிர்ந்திருக்கிறார்.