திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ப்ளீஸ் இதை மட்டும் பண்ணிடாதீங்க" இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் உருக்கமான வேண்டுகோள்..
தமிழ் சினிமாவில் அறியப்படும் இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பீட்சா' திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
இப்படத்திற்கு பின்பு சித்தார்த், பாபி சிம்ஹா போன்றவர்கள் நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியாகியிருக்கும் ஜிகர்தண்டா படத்தைப் பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இது போன்ற நிலையில், கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அவர், "தயவுசெய்து படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை உடைத்து விடாதீர்கள்" என்று மனம் உருகி வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.