திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தண்டிக்குடி மலைவாழ் மக்களுடன் ஜிகர்தண்டா 2 படம் பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்... வைரலாகும் புகைப்படம்!!
ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 ஆண்டு கழித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா 2 . தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுதற்குரியது. ஜிகர்தண்டா 2 படம் இதுவரை 17 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் பார்த்து விட்டு பிரபலங்கள் பலரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த தண்டிக்குடி மலைவாழ் மக்களுடன் சேர்ந்து திரையரங்கில் ஜிகர்தண்டா 2 படம் பார்த்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கார்த்திக் பெரிய திரையில் வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர்களை பார்த்து மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
#JigarthandaDoubleX Tribe is all Smiles ❤️❤️
— karthik subbaraj (@karthiksubbaraj) November 16, 2023
Watched the film in Theatre with all these actors of #JigarthandaXX from Thandikudi.....
Felt so so happy seeing them feeling so so happy seeing themselves on Big Screen... pic.twitter.com/muDjtqZYts