மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன நடந்தது... பிரபல இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா நெகட்டிவ்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், ஜெயக்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மணிரத்னம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் மணிரத்னத்திற்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் மருத்துவமனையில் இருக்கும் மணிரத்னம் நலமுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சிறிது கால ஓய்வுக்கு பின்னர் மணிரத்னம் தனது இயல்பு வாழ்க்கையை தொடரலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.