திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய்க்காக என்னுடைய இதயத்தை அறுத்து கொடுப்பேன்.. உணர்ச்சி பொங்க பேசிய மிஷ்கின்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் லியோ படத்திற்கான வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விஜய், மிஸ்கின், கௌதம் மேனன், ரத்னகுமார், த்ரிஷா, மடோனா செபாஸ்டின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள பலரும் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் நடைபெறாததால் தற்போது வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வழக்கம் போல் குட்டி கதையை கூறி உற்சாகப்படுத்தினார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள் பலரும் விஜயை பற்றி புகழ்ந்து பேசினர்.
அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் விஜய்காக தன்னுடைய நெஞ்சை கூட அறுத்து கொடுப்பேன் என அவர் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் கேள்விப்பட்ட திரை ஜாம்பவான்களில் ஒருவர் மைக்கேல் ஜாக்சன், மற்றொருவர் புரூஸ்லி. ஆனால் நான் கண்ணால் பார்த்த ஒரு திரையுலக ஜாம்பவான் என்றால் அது விஜய் தான்.
நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் இளமையாக இருக்கிறார். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் விஜையின் அன்பு எப்போதும் மாறாமல் இருக்கிறது. விஜய் இந்த அளவிற்கு உயர அதிர்ஷ்டம் இல்லை. அவருடைய கடின உழைப்பு தான் என அவர் பேசியுள்ளார்.