திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"கதைய ட்விட்டர்லேயே சொல்லிடுவாரு போல..." மாவீரன் திரைப்படத்தில் மிஸ்கின்... கலாய்த்த நெட்டிசன்கள் !
சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன் இந்தத் திரைப்படத்தை மண்டேலா படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களுக்கு பிறகு சிவா கார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் மாவீரன்.
இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் அவர் இந்தத் திரைப்படத்தில் முரட்டுத்தனமான வில்லனாக வேஷ்டி சட்டை அணிந்து நடிப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டதாகவும் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என கூறி இருக்கிறார்.
சிவகார்த்திகேயனுடன் தனக்கு நேரடியாக மோதும் காட்சிகள் நிறைய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விட்டால் இவர் முழு கதையையும் ட்விட்டரில் சொல்லிவிடுவார் என கலாய்த்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் பற்றி பேசியிருக்கும் அவர் இன்னும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை கொடுப்பவர் மடோன் அஸ்வின் என பாராட்டி இருக்கிறார்.