மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று பிறந்த இந்த குழந்தை ரஜினி போன்ற பெரிய நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவரின் குழந்தை.!
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித்துக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராக சேர்ந்து, அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் பா. ரஞ்சித். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான மெட்ராஸ் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். பரியேறும் பெருமாள், இரண்டாவது உலகப்போரின் கடைசி குண்டு படங்களை தயாரித்து அதிலும் வெற்றிபெற்றார் இயக்குனர் பா. ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து சல்பேட்டா என்ற படத்தை இயக்கிவருகிறார்.
இந்நிலையில், இவருக்கு திருமணம் முடிந்து அனிதா என்ற மனைவியும், மகிழினி என்ற மகளும் உள்ள நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு மிளிரன் என்று பெயர் வைத்துள்ளனர்.