திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஹாலிவுட் படங்களை போல் தமிழில் படங்களை இயக்க முடியாது" மனம் திறந்த இயக்குனர் பார்த்திபன்
1999ம் ஆண்டு "புதிய பாதை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். தொடர்ந்து பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ள குட்டிக்காரன், டாட்டா பிர்லா போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த "இரவின் நிழல்" என்ற திரைப்படம் தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை பற்றி பார்த்திபன் கூறியிருப்பதாவது,
"குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படத்தை நான் எடுத்து வருகிறேன். குழந்தைகளும் அப்படத்தை ரசிக்கலாம். இப்படத்தில் VFX பணிகள் நிறைய உள்ளன. ஹாலிவுட் படங்களை போல் நம்மால் எடுக்க முடியாது. அதற்கு நமது பட்ஜெட் தடையாக உள்ளது.
நான் எடுப்பது மிக பிரம்மாண்டமான படம் அல்ல. ஆனால் மிகவும் நுணுக்கமான படம். விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திப்பேன். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்திலேயே பிரம்மாண்டமான திரைப்படங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்று பார்த்திபன் கூறியுள்ளார்.