#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சலார் பட இயக்குனருக்கு இப்படியொரு நோயா.? அதிர்ச்சியில் திரையுலகம்.!
2014ம் ஆண்டு "உக்ரம்" திரைப்படம் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானவர் பிரஷாந்த் நீல். இதையடுத்து இவர் கே ஜி எப் 1 மற்றும் கே ஜி எப் 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு பாகங்களுமே கன்னடத் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களாக அமைந்தன.
இந்த இரண்டு பாகங்களையும் நான்கு வருட இடைவெளியில் இயக்கி வெளியிட்ட பிரஷாந்த் நீல், தற்போது பிரபாஸை நாயகனாக வைத்து "சலார்" படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரித்விராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய பிரஷாந்த் நீல், "சலார் படத்திற்கும், கே ஜி எப் படத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனக்கு OCD பாதிப்பு இருப்பதால் யாராவது வண்ணமயமான ஆடை அணிந்தால் கூட எனக்குப் பிடிக்காது.
அது தான் எனது படங்களிலும் பிரதிபலிக்கிறது" என்று கூறியுள்ளார். எஸ்.ஜே. சூர்யாவும் தனக்கு இந்தக் குறைபாடு இருப்பதாக பலமுறை கூறியுள்ளார். இது ஒரு மனநோய். வேதிப்பொருள் பற்றாக்குறையால் ஏற்படும் நரம்பியல் குறைபாடு. இதில் வண்ணங்கள் குறித்த பயம், ஒரே சிந்தனை என்று பல வகைகள் உள்ளன.