மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதலை 2ம் பாகத்தை வெளியிட விடமாட்டேன்.. பிரபல இயக்குனர் ஆவேசம்!
விடுதலை 2ம் பாகத்தை வெளியிட விடமாட்டேன் என்று வாச்சாத்தி திரைப்பட இயக்குனர் ரவி தம்பி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த படத்தில் கௌதம் மேனன், சூரி, இயக்குனர் தமிழ், ரமேஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்திருந்தனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார். இதனையடுத்து விடுதலை 2ம் பாகம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விடுதலை 2ம் பாகம் திரைப்படத்தை வெளியிட விட மாட்டேன் என்று வாச்சாத்தி திரைப்பட இயக்குனர் ரவி தம்பி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், என் கதையை வைத்து எடுத்த படம் தான் விடுதலை. ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை தழுவி எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விடுதலை 2ம் பாகத்தை வெளியிட 4 முறை தள்ளிப்போட்டுள்ளேன். இனியும் சட்ட போராட்டம் தொடரும் என அவர் கூறியுள்ளார்.