மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அமைதியாக இருப்பது நியாயத்திற்கு தரும் தண்டனை" சூர்யா மற்றும் கார்த்தியை கண்டித்த சமுத்திரக்கனி.!
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா. இவர் சமீபத்தில் 'பருத்தி வீரன்' படத்தின் போது படத்தின் இயக்குனர் அமீர் பணம் விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார். இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவியது.
இந்த விஷயத்தை முற்றிலுமாக மறுத்த இயக்குனர் அமீர், 'பருத்திவீரன்' படத்தின் போது என்ன நடந்தது என்று படத்தில் கதாநாயகன் மற்றும் படப்பிடிப்பின் போது இருந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். பருத்திவீரன் படத்திற்காக சசிகுமாரிடம் தான் கடன் வாங்கினேன் என்று கூறி அவர் தரப்பு நியாயத்தை விளக்கினார்.
மேலும் இதனை ஒத்துக் கொண்ட நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தன்னிடம் தான் பணம் வாங்கியதாகவும், ஞானவேல் ராஜா பேசியதை கண்டித்தும் வீடியோ வெளியிட்டார். மேலும் சமுத்திரகனியும் ஞானவேல் ராஜா பேசியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் என்ற வீடியோ வெளியிட்டு இறந்தார்.
இதன்படி பருத்திவீரன் பட நடிகர் கார்த்தி இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது நல்லதல்ல. பருத்திவீரன் பஞ்சாயத்தின் போது சூர்யா, கார்த்தி இருவருமே இருந்தனர். உண்மையை தெரிந்து கொண்டு அமீரை குற்றவாளியாக்குவது நியாயமாகாது என்று சமுத்திரக்கனி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.