மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவின் பாராட்டை பெற்ற அதிதி சங்கர்.. என்ன விஷயம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தனது நடிப்பு திறமையின் மூலம் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
தற்போது மேடன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மாவீரன்'. இப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்று ரசிகர்களால் கூறப்பட்டு வருகின்றது.
மேலும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, யோகி பாபு, இயக்குனர் மிஷ்கின் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சங்கர் மாவீரன் திரைப்படத்தை திரையரங்கில் கண்டு இப்படத்தை பாராட்டி ட்விட்டரில் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மடோன் அஸ்வினின் புத்திசாலித்தனத்தின் மூலம் 'மாவீரன்' திரைக்கதையை சிறப்பாக இயக்கியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் தனது நடிப்பு திறமையை அருமையாக காட்டியிருக்கிறார் என்றும், அதிதி தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்துள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். இச்செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.