மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகமெல்லாம் தாடி, முடி..! லாக்டவுனில் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சேரன்..! ஷாக்கிங் புகைப்படம்..!
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் பொக்கிஷமான பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராகவும் பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவருக்கு தற்போது சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் கடந்த வருடம் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் தோன்றினார். தற்போது அடுத்த படங்களை இயக்க காத்திருந்த இயக்குனர் சேரனுக்கு கொரோனா ஊரடங்கு ஒரு தடையாக வந்தது. இந்நிலையில் வீட்டிற்குள் முடங்கியது போதும், நீண்ட இடைவெளிக்கு பின் அலுவலகம் வந்து வேலை பார்க்க துவங்கியாச்சு என்ற பதிவுடன் அவரது தற்போதைய புகைப்படத்தையும் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் சேரன்.
முகமெல்லாம் தாடி வளர்ந்து, தலை முடி வளர்ந்து பார்பதற்க்கே மிகவும் வித்தியாசமாக உள்ளார் சேரன். இதோ அந்த புகைப்படம்.
நீண்ட இடைவெளிக்கு பின் அலுவலகம் வந்து வேலை பார்க்க துவங்கியாச்சு... எவ்வளவு சுகமா இருக்கு.. இத்தனை நாள் முடங்கி கிடந்த நாம் இனி வெளிச்சத்தை நோக்கி நடக்கலாம்.. இது எனக்கு மட்டுமல்ல... எல்லோருக்குமானது. விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவோம் என நம்பி களத்தில் இறங்கலாம். pic.twitter.com/Q47COhPUJK
— Cheran (@directorcheran) August 19, 2020