மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமலின் மிகப்பெரிய வெற்றிப்படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க போகிறாரா சேரன்? அவரே கூறிய தகவல்.
பிக்பாஸ் சீசன் மூன்று பல்வேறு சர்ச்சைகள், விவாதங்களுடன் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கவின் - லாஷ்லியாவின் காதல் கதை. சேரன் அப்பா - லாஷ்லியாவின் பாச போராட்டம் என இந்த சீசன் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏறக்குறைய போட்டியின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு காடு, வீடு, இரவு, மிருகம், வாழ்க்கை இப்படி வார்த்தைகள் எழுதப்பட்ட அட்டைகளை கொடுத்து அதை கோர்வையாக்கி ஒரு கதை சொல்ல சொல்லி கமல் கூறியிருந்தார். அனைவரும் கதை சொல்ல அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஏற்பட்ட சில காரணங்களால் சேரன் கதை கூற மறுத்துவிட்டார்.
அதற்கு கமல், இங்கு கதை சொல்லாவிட்டால் என்ன, வெளியே வந்து கதை கூறுங்கள் என சேரனிடம் கூற அவரும் உடனே ஆர்வமாகி உங்களுக்கு தேர்வர் மகன் 2 படத்திற்கான கதை வைத்திருப்பதாகவும், வெளியே வந்து கதை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கமல் இதற்க்கு சம்மதம் தெரிவிப்பாரா? தேவர் மகன் 2 படம் வருமா? சேரன் தான் இயக்குனரா? பொறுத்திருந்து பார்ப்போம்